தென்மாவட்டங்களில் இடியுடன் மழை... சென்னையில் லேசான மழை... வானிலை மையம்!

கோப்புப் படம்
- News18
- Last Updated: November 19, 2019, 2:54 PM IST
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குமரி கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் ஆறு சென்டி மீட்டர் மழையும் திருச்செந்தூரில் 5 சென்டி மீட்டர் மழையும் ஆலங்குடியில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
Also see...
குமரி கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் ஆறு சென்டி மீட்டர் மழையும் திருச்செந்தூரில் 5 சென்டி மீட்டர் மழையும் ஆலங்குடியில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
Also see...