Home /News /tamil-nadu /

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...!

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...!

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வெப்பநிலை ஒன்று அல்லது 2 டிகிரி செல்சியல் அதிகரித்து காணப்படும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பர்லியாரில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Weather Update

அடுத்த செய்தி