வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் வியாபாரிகள்: கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க கோரிக்கை...

கோயம்பேடு சந்தையில் மீண்டும் விற்பனையை தொடங்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் வியாபாரிகள்:  கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க கோரிக்கை...
கோப்பு படம்
  • Share this:
கோயம்பேடு சந்தையில் மீண்டும் விற்பனையை தொடங்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் தீவிரம் காரணமாக கோயம்பேடு காய்கறி, பழ, பூ அங்காடிகள் திருமழிசை, மாதவரம் பகுதிகளுக்கு பிரித்து இடமாற்றம் செய்யப்பட்டது. இதில் கோயம்பேட்டில் இயங்கி வந்த 1,700 பழ கடைகளில் 200 கடைகளுக்கு மட்டுமே மாதவரம் பேருந்து நிலையத்தில் விற்பனை செய்ய இடம் ஒதுக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.மீதமுள்ள 1,500 வியாபாரிகளுக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

இது குறித்து வியாபாரிகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் ராஜசேகர் கூறும்போது,கோயம்பேட்டில் இருக்கும் கடைகள் அனைத்தும் தனி சொத்து என்பதால், அவற்றை வங்கிகளில் வைத்து கடன் பெற்றே பெரும்பாலான வியாபாரிகள் காய்கறிகள், பழங்களை விற்பதாகவும், தற்போது வியாபாரம் முடங்கியதால் அவர்கள் கடனில் மூழ்கும் நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதே நிலை தொடர்ந்தால், சுமார் 4500 வியாபாரிகளும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.மேலும்,"திருமழிசையில் ஒரு ஆட்சியர், ஒரு எஸ்.பி, 5 வட்டாட்சியர்கள், 10 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 கடைக்கு ஒரு அதிகாரி என நியமிக்கப்பட்டு பாதுகாப்புடன் வியாபாரம் நடைபெறுவதாகவும், இதேபோன்று கோயம்பேட்டில் பாதுகாப்பை ஏற்படுத்தினால் அங்கு எந்த பாதிப்பும் இன்றி வியாபாரம் செய்யலாம் என தெரிவித்தவர். இதை செயல்படுத்துவது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனவும் தெரிவித்தார்.

First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading