• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முதல்வர் ஸ்டாலினின் 100 நாள் ஆட்சி குறித்து சட்டப்பேரவையில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பாராட்டு!

முதல்வர் ஸ்டாலினின் 100 நாள் ஆட்சி குறித்து சட்டப்பேரவையில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பாராட்டு!

முதல்வர் ஸ்டாலினின் 100 நாள் ஆட்சி குறித்து சட்டப்பேரவையில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பாராட்டு!

முதல்வர் ஸ்டாலினின் 100 நாள் ஆட்சி குறித்து சட்டப்பேரவையில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பாராட்டு!

முதல்வர் ஸ்டாலினின் 100 நாள் ஆட்சி குறித்து சட்டப்பேரவையில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

  • Share this:
    தமிழக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் விவசாய நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினின் 100 நாள் ஆட்சி குறித்து சட்டப்பேரவையில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி


    முதல்வர் ஸ்டாலின் 100 நாட்களை பூர்த்தி செய்கின்ற இந்நாளில் செல்வதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்கின்ற அரசாக செயல்கடுகிறது.

    வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சருக்கும், முதல்வருக்கும் நன்றி.

    கொங்கு ஈஸ்வரன்:

    இந்த அரசின் செயல்பாடு 100 நாட்களை மட்டுமே பூர்த்தி செய்த அரசு போல இல்லாமல் பல ஆண்டுகளாக ஆட்சி செய்வது போல இருக்கிறது, மனதார வாழ்த்துக்கள்.

    ஜிவாஹிருல்லா: மனிதநேய மக்கள் கட்சி

    கொரோனாவை தமிழகத்தை விட்டு விரட்ட முடியும் என நம்பிக்கை கொடுத்திருக்கிறது இந்த 100 நாள் ஆட்சி. பல காலம் தொடர வாழ்த்துகள்.

    சதன் திருமலை குமார், மதிமுக

    மக்களின் கண்ணீரை துடைக்க ஏகப்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, 100 நாட்களில் குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் போற்றுதலுக்குறியது.

    தளி ராமச்சந்திரன் - கம்யூனிஸ்ட்

    100 நாட்கள் மக்களின் வாழ்விற்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாக உள்ளது. டாப் 10 முதல்வர்களில் நம்பர் ஒன் முதல்வராக செயல்படுகிறார். மக்கள் நலன் தொடர வாழ்த்துகிறேன்.

    நாகை மாலி - கம்யூனிஸ்ட்

    கீழ்வேளூரில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டி, முதல்வரை பாராட்டி வாழ்த்துகிறேன்.

    சிந்தனை செல்வன், விசிக

    நெகிழ்ந்து மகிழ்ந்து இருக்கிறோம், விசிக சார்பில் நெஞ்சார பாராட்டுகிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சரகர் ஆகலாம் என்ற சனநாயக சமத்துவ பணிக்காக நெகிழ்ந்து இருக்கிறோம். மாநில கல்வி கொள்கை உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் உள்வாங்கி இருக்கிறது.

    கலைஞரின் வழியில் சமத்துவம் காக்கும் நாயகனாக முதல்வரின் பயணம் தொடர வாழ்த்துகிறோம். பனை மரத்தின் சிறப்புகளையும் பாதுகாப்பையும் வேளாண் அறிக்கையில் அறிவித்திருப்பது மகிழ்வை தருகிறது. கியூபாவில் இருக்கிறோம் என்கிற உணர்வை தருகிறது.

    செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்

    முதல்வர் அவர்களே நீங்கள் உயர உயர இந்த நாடும் உயரும். அருமையான ஆட்சியை தரும் முதல்வரை பாராட்டுகிறேன். தமிழகத்திற்கு விடியல் வந்திருக்கிறது என மக்களிடம் நம்பிக்கை பிறந்திருக்கிறது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனு நீதி வழங்கிய சோழனாக விளங்குகிறார்.

    துரைமுருகன், அவை முன்னவர்

    மகிஷாசூரன் மாதிரி கொரோனா வந்து கொண்டு இருக்கிறது. அதன் ஆனி வேரை பிடுங்கி விரட்டுவார் முதல்வர். வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை என்பது மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறது. நம் பாட்டனும் முப்பாட்டனும் நினைத்து கூட பார்க்க முடியாத அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை துவங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளார் முதல்வர். பெரியார் நினைத்தார், கலைஞர் தீர்மானம் போட்டார், ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார் என்று அவர் கூறினார்.

    முதல்வர் ஸ்டாலின்

    கடந்த 100 நாட்களை விட எதிர்வரும் நாட்களை பற்றியே எண்ணிக்கொண்டு இருக்கிறேன். இப்போது தேர்தல் வைத்தால் கடந்த தேர்தலில் வாக்களிக்காதவர்கள் கூட திமுகவிற்கு வாக்களிப்பார்கள், அந்த அளவிற்கு நல்ல பெயரை சம்பாதித்து உள்ளோம். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற கூற்றிற்கு ஏற்ப எதிர்வாலத்தில் இந்த அரசை பற்றி சொல்ல வேண்டும். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக செயல்படுத்துவோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கலைஞர் இருந்து செய்ய வேண்டியதை அவரது மகன் நிச்சயம் செய்வேன். எனது அரசு என்று ஆரம்பித்த இந்த அரசு இப்பொழுது நமது அரசாக செயல்படுகிறது. 100 நாள் அரசை வாழ்த்தியவர்களுக்கு நன்றி, வாழ்த்த மனமில்லாதவர்களின் மனங்களையும் அடுத்த 100 நாட்களில் வென்றெடுப்போம் என்று அவர் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: