மேல் மருவத்தூரில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழ் மருவத்தூர் ஏரியை ஆக்கிரமித்து, கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் கட்டப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அத்துடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடமும் ஆக்கிரமிப்பு இடத்தில்தான் உள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
மனுதாரரின் குற்றச்சாட்டை மாவட்ட ஆட்சியர் தரப்பும் ஒத்துக்கொண்டது. இதையடுத்து, மனுதாரர் கொடுத்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 5 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.