மேகதாது விவகாரம்: கர்நாடக முதல்வர் எழுதிய கடிதத்திற்கு நாளை தமிழக முதல்வர் பதில் கடிதம் எழுதுவார்: அமைச்சர் துரைமுருகன்

இந்த விவகாரம் விவாதிக்க கூடிய ஒன்றா? இல்லையா? என்பது குறித்து தான் தமிழக முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவிப்பார்.

இந்த விவகாரம் விவாதிக்க கூடிய ஒன்றா? இல்லையா? என்பது குறித்து தான் தமிழக முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவிப்பார்.

  • Share this:
கர்நாடக முதலமைச்சர் மேகதாது விவகாரம் தொடர்பாக எழுதிய கடிதத்திற்கு நாளை தமிழக முதலமைச்சர் பதில் கடிதம் எழுத உள்ளார் என நீர்வளத்துறை துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் குறித்து பேசினார். அப்போது மேகதாது விவகாரம் தொடர்பாக நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடகவிற்கு ஆணித்தரமான உரிய பதிலை அளிப்பார் என கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா எழுதிய கடிதத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக இரண்டு மாநில அரசும் விவாதித்து இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விவகாரம் விவாதிக்க கூடிய ஒன்றா? இல்லையா? என்பது குறித்து தான் தமிழக முதலமைச்சர் இந்த கடிதத்தில் தெரிவிப்பார் எனவும் கூறினார்.

Also read: மதுரையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் மரணம்; இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இரண்டு மாநில அரசிடமும் மத்திய அரசு இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை. மேலும் பிரதமரிடம் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் நேரில் சென்று இது குறித்து கடிதம் வழங்கியுள்ள நிலையில், கர்நாடக அரசு தமிழக அரசிடம் இந்த கேள்வியை முன் வைத்திருப்பது குறித்த கேள்விக்கு... நாளை அந்த கடிதத்தில் அதற்கான பதில் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published: