மேகதாது விவாகாரம்: தமிழக அரசு என்ன செய்ய போகிறது? பேரவையில் குரல் எழுப்பிய உறுப்பினர்கள்

மேகதாது விவாகாரம்: தமிழக அரசு என்ன செய்ய போகிறது? பேரவையில் குரல் எழுப்பிய உறுப்பினர்கள்

மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற குழு தலைவைர்கள் பேரவையில் வலியுறுத்தினர்.

  • Share this:
மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியதும், காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் செல்வபெருந்தகை, மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி டெல்டா மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே, மேகதாது விவகாரம் குறித்து அவை முன்னவர் விளக்கம் வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து பேசிய தமிழகவாழ்வுரிமை கட்சி உறுப்பினர் வேல்முருகன், ஒன்றிய அரசு மேகதாது விவகாரத்தில் பாரமுகமாக நடந்து கொள்கிறது. எனவே சரியான தீர்வை அரசு காணவேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழகமே ஒன்று திரண்டு கர்நாடக அரசின் முயற்சியை தடுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி கூறினார்.

மேலும், சட்டரீதியாக இப்பிரச்சினையை அரசு அனுகி தடுத்து நிறுத்த இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமசந்திரன் வலியுறுத்தினார்.

Also read: வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்: செப்.1 முதல் தமிழக பள்ளிகளில் புதிய விதிமுறைகள்!

ஒன்றிய அரசு உள்நோக்கதுடன் செயல்படுவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் ஈஸ்வரன் குற்றம் சாட்டினார்.

மேலும், அணை கட்டியே தீருவோம் என்ற கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த மதிமுக உறுப்பினர் சதன் திருமலைகுமார் தெரிவித்தார்.

இதே போல பாமக உறுப்பினர் ஜி.கே மணி தமிழ்நாடு ஒரே குரலில் எழுந்து நிற்கிறது என்று கர்நாடக அரசுக்கு தெரிவிக்கும் விதமாக போராட்டத்தை கூட நடத்தலாம் என்றும் தெரிவித்தார்.

இதே போல அணைகட்டுவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும், தமிழக அரசுக்கு துணை நிற்கும் என்று பாஜக உறுப்பினர் எம்.ஆர். காந்தி கூறினார்.

மேலும் மனிநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜாவஹிருல்லா, தமிழக மக்களின் உரிமைகளை காக்க இந்த அரசு என்ன செய்ய போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

இதேபோல், முதல்வர் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தகளை கட்சி உறுப்பினர் சிந்தனை செல்வன் தெரிவித்தார்

எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது,  காவிரி பிரச்னையை மத்திய அரசின் அரசிதழில் ஜெயலலிதாவின் சட்ட போராட்டம் மூலம் வெளிவந்தது. காவிரியின் நடுவர் மன்றத்தின் இறுதிதீர்ப்பை பெற்றுத்தந்தவர் ஜெயயலலிதா. இதற்காக தஞ்சயில் விவசாயிகள் சார்பாக நன்றி அறிவிப்பு கூட்டம் கூட நடைபெற்றது. ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி பழனிசாமி வழக்கை துரிதப்படுத்தினார்.

கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்ட போது, தமிழகம் பாதிக்கப்படும் என்பதால் அனைத்து கட்சிகளும் எதிர்த்தோம். இந்த பிரச்னை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி பிரதிநிதிகள் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்ச்ரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு மாறுபட்டு கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. மேகதாது அணை கட்டும் முயற்சி தமிழகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் தஞ்சை விவசாயிகள் சேற்றில் கை வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்கும் நிலை உள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கவேண்டும் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published: