• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • MeKedatu | மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டும் விவகாரம்.. இன்று கூடுகிறது அனைத்துக் கட்சிக் கூட்டம்..

MeKedatu | மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டும் விவகாரம்.. இன்று கூடுகிறது அனைத்துக் கட்சிக் கூட்டம்..

Youtube Video

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது

  • Share this:
    காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு அணை கட்டப்பட்டால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து குறையும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணை திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை, தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று எதிர்ப்பை பதிவு செய்தார்.

    எனினும் கர்நாடக அரசு முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி விவாதிக்க உள்ளார். நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 10.30மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 13 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க...வயதனாலும் இளமையாக இருக்கனுமா? அப்போ 8 வடிவ நடைப்பயிற்சியை தினமும் பண்ணுங்க

    கூட்டத்தில் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிப்பது, சட்ட ரீதியிலான முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: