மேகதாது பிரச்னையில் பிரதமரை எதிர்த்து தான் அண்ணாமலை போராட வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் சாடல்

பி.ஆர்.பாண்டியன் - அண்ணாமலை

போராட்டம் என்கிற பெயரில் உரிமைக்கான போராட்டத்தை தமிழக பா.ஜ.க  திசை திருப்ப வேண்டாம் என பி.ஆர்.பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share this:
மேகதாது விவகாரத்தில் பிரதமரை எதிர்த்து தான் தமிழக பா.ஜ.க. போராட வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். 

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பி.ஆர் பாண்டியன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் செயலர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இதனை தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்ற பிரச்சனை  முதல்வர் பசவராஜ் பொம்மை மேகதாதுவில் அணைக்கட்ட உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Also Read:  அரசியலுக்கு ரெஸ்ட்.. பிசினஸில் கவனம் - மாஃபா பாண்டியராஜன் முடிவு

மேலும் பேசியவர், “தமிழகத்தில் நீர் பாசன துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் . அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பாசன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நீர் பாசன பிரச்சனைகளில் ஏற்படுகின்ற பாதிப்புகளை விரைந்து தீர்த்திட உயர்நீதிமன்றதுக்கு இணையான தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவிரியின் குறுக்கே பரமத்தி வேலூர் பகுதியில் ஏக்கருக்கு 15 லட்ச ரூபாய் கட்டண நிர்ணயம் செய்து தண்ணீர் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக நோக்கோடு தனியார் நிறுவனங்கள் மோசடியான  வேளையில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

Also Read:  ஓபிஎஸ்-இபிஎஸ் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது இதற்காகத்தான் - தங்க தமிழ்செல்வன் விளக்கம்

பா.ஜ.க.வின் தமிழக தலைவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்பதாக கூறியுள்ளார். உண்மையிலே போராட்டம் நடத்த வேண்டும் என்றால் பிரதமரை கண்டித்து தான் போராட வேண்டும் .காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் நியமிக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
போராட்டம் என்கிற பெயரில் உரிமைக்கான போராட்டத்தை தமிழக பா.ஜ.க  திசை திருப்ப வேண்டாம் என்றார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: