• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மேகதாது பிரச்சினை முடிந்துவிட்டது : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

மேகதாது பிரச்சினை முடிந்துவிட்டது : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் மூலம் தமிழகத்தின் அனுமதியை பெறாமல் மேகதாது திட்டத்தை செயல்படுத்த முடியாது என மத்திய அரசு தெளிவாக்கியுள்ளது.

  • Share this:
    மேகதாது  அணை தொடர்பான பிரச்சினை முடிந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கையில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழக விவசாயிகள், குடிநீர் தேவை சார்ந்த விவகாரம் என்பதால் இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், அணை கட்டும் அம்மாநில அரசின் முடிவை தமிழக பாஜக சார்பில் கடந்த 5ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில்  தஞ்சாவூரில்நடைபெற்ற இந்த போராட்டத்தில்  மேகதாது திட்டத்தை  கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் டெல்லி பயணம் - பாஜகவில் சேருகிறாரா


    இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மேகதாது  அணை திட்டம் தொடர்பாக கர்நாடகவைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த  மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கிடைக்கும் வரை  மேகதாது திட்டத்திற்கான கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) மேலதிக மதிப்பீட்டிற்கு பரிசீலிக்க முடியாது என்று பதிலளித்திருந்தார். இதன் மூலம் தமிழகத்தின் அனுமதியை பெறாமல் மேகதாது திட்டத்தை செயல்படுத்த முடியாது என மத்திய அரசு தெளிவாக்கியுள்ளது.

    மேலும் படிக்க: தண்ணீரே இல்லாத சிங்கப்பூரில் கூட, தூய்மைக் குடிநீர்  திட்டம் செயல்படுத்தப்படும் போது தமிழ்நாட்டில் முடியாதா என்ன: ராமதாஸ்


    டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  தமிழகத்திற்கு பல்வேறு நல்லதுகளை செய்ய பாஜக நினைப்பதாகவும்,அதற்கு ஏற்ப நல்லதுகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். பாஜக சித்தாந்தத்தை ஏற்கும் யார் வேண்டுமானாலும் கட்சியில் இணையலாம் என்றும் பேசினார்.  மேகதாது விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, மேகதாது விவகாரம் முடிந்துவிட்டது என்றும்  மற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அணை கட்ட முடியாது என்பதை  மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: