Home /News /tamil-nadu /

மேகதாது அணை விவகாரம்: துரைமுருகன் தலைமையிலான தமிழக குழு மத்திய அமைச்சருடன் இன்று சந்திப்பு

மேகதாது அணை விவகாரம்: துரைமுருகன் தலைமையிலான தமிழக குழு மத்திய அமைச்சருடன் இன்று சந்திப்பு

மேகதாது

மேகதாது

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான இந்தக் குழுவில், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், மதிமுக சார்பில் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

    மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் இன்று சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

    தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைகட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத்தி இருந்தார். அதில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.

    எனினும், மேகதாது அணை விவகாரம் குறித்து கட்டாயம் விவாதிக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இன்று நடைபெறவிருந்த கூட்டம், அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் டெல்லியில் இன்று பிற்பகல் சந்தித்துப் பேசுகின்றனர்.
    மேலும் படிக்க: தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் திருடுப்போனதாக புகார்... ரூ.100 கோடி வரை இழப்பு என தகவல்
    நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான இந்தக் குழுவில், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், மதிமுக சார்பில் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். அப்போது, மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது, கர்நாடகாவின் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Cauvery River, Mekedatu

    அடுத்த செய்தி