தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக முக்கிய பிரச்சனைகளில் மௌனமாக இருந்துவரும் நிலையில், அமமுக, பாஜக போன்ற கட்சிகள் சாமர்த்தியமாக அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றன.
திமுக, அதிமுக என்கிற கழகங்கள் இல்லா தமிழ்நாடு என்கிற முழக்கத்தை பா.ஜ.க தொடர்ந்து முன் வைத்து வருகிறது. ஆனால், கழகங்களோடு கூட்டணி வைத்தும் வருகிறது. குறிப்பாக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தே கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தது. தேர்தல் முடிவில் 133 இடங்களில் வென்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் அரியணையில் அமர்ந்துள்ளது.மொத்தம் 66 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக எதிர்க் கட்சியாகியுள்ளது. ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் அதிமுக ஆட்சியை இழக்க காரணமான திருப்தியோடு இருக்கிறது டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதலமைச்சராக இருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகியுள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறையில் இருந்து வந்த பிறகு, தேர்தலின் போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். இப்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த சசிகலா என்ன செய்யப் போகிறார்? என்கிற அதிர்ச்சியோடு இருக்கிறது ஓபிஎஸ், இபிஎஸ் அணி.
அறிக்கை அரசியல்:
எப்போதாவது அரசியல் சார்ந்த அறிக்கைகள்; எப்போதும் நிர்வாகிகள் நீக்கம் குறித்த அறிக்கைகள் என்பதைத் தாண்டி அதிமுகவின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. மாறாக அதிமுக கூட்டணியில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க அடித்து விளையாடி வருகிறது. அரவக்குறிச்சியில் நின்று, தோற்றாலும் அண்ணாமலை மாநிலத் தலைவராக்கப்பட்டுள்ளார். தலைவரானதும் கட்சியினர் மத்தியில் கூறியஊடகங்கள் குறித்த அதிர்ச்சி கருத்து தொடங்கி திமுகவிற்கு மாற்று நாங்கதான் என்கிற அதிரடி கருத்து வரை அண்ணாமலையின் பேச்சு உற்று நோக்கப்படுகிறது.
மேலும் படிக்க: சத்யம் தொலைக்காட்சி மீதான தாக்குதல் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டதற்கான சான்று - சீமான் சாடல்!
இத்தகைய சூழலில் தான் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று மீண்டும் கிளம்பியுள்ளது. இது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது மட்டுமல்ல. கூட்டாட்சிக்கும் எதிரானது, அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று தமிழ்நாடு அரசும் அனைத்துக் கட்சிக் குழுவும் உரக்கச் சொல்கிறது. பிரதமரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
பாஜக, அமமுக போராட்டம் அறிவிப்பு
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று வலியுறுத்தி அமமுக ஆகஸ்ட் 6ம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 5ம் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் என்று பா.ஜ.கவும் அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினையில் முதன்மை எதிர்க்கட்சியான அதிமுக, பெயரளவில் அறிக்கையோடு ஒதுங்கியுள்ளது.
சசிகலாவின் அரசியல் தீவிரத்தையடுத்து டில்லி சென்ற அதிமுக நிர்வாகிகள், மேகதாது அணை குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியதாக சொல்கிறார்கள். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு பிறகு, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து மாவட்டங்களிலும் ஜுலை 28ம் தேதி அதிமுகவின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ப் அதிலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை? என்பதே முக்கியமானதாக இருந்தது.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் வரும் 13-ம் தேதி தாக்கல்
ஆனால், மத்தியிலும் கர்நாடகத்திலும் ஆளும் கட்சியாக பாஜக உள்ளநிலையில் மேகதாது அணை கட்டக் கூடாது என்று கூறி தமிழக பாஜக போராட்டத்தை அறிவித்து, களமிறங்கியுள்ளது. கர்நாடக அரசை எதிர்த்து போராட்டம் என்றாலும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் போராட்ட களத்திற்கு வருகிறது பா.ஜ.க. பெருமைமிகு கன்னடியன் என்று சொன்ன அண்ணாமலையின் தலைமையில். முதன்மை எதிர்க்கட்சி நிலையில் உள்ள அதிமுக.
திமுகவிற்கு மாற்று பாஜகதான் என அக்கட்சி கூறிவரும் நிலையில், பாஜகவின் திட்டத்திற்கும் துணை போகும் வகையில் அதிமுக அமைதி காக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.