தமிழகத்தில் வரும் 17ம் தேதி மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
3ஆவது அலை முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி இந்தியா முழுவதும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டன.
20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கையும் தாண்டி ம் 28 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில், 1,85,370 பேர் தடுப்பூசி செலுத்திகொண்டனர். இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை (செப்.17) மீண்டும் மெகா தடுப்புசி முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கடந்த முறை நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம் தடுப்பூசி திருவிழாவாகவே நடைபெற்றது. மக்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.இதையடுத்து, 10 நாட்களுக்கு ஒருமுறை தடுப்பூசி முகாம் நடத்தலாம் என்று முதலமைச்சர் யோசனை தெரிவித்தார்.
இதையும் படிங்க: இதுக்கு போய் ரூ.1.50 கோடி செலவா? கனிமொழிக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!
இதையடுத்து, வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசி அனுப்பும்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். தற்போது, 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. வரும் 17ம் தேதி மீண்டும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம். நாளையோ, நாளை மறுநாளோ 10 லட்சம் தடுப்பூசி வரை தமிழகத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அன்றைய தினமும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.