தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்

மாதிரிப் படம்

தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மருத்துவத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 • Share this:
  கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் நோக்கில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, நாளை 43 ஆயிரத்து 51 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. நாளை ஒரே நாளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 20லட்சம் தடுப்பூசிகள் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள கோவை,நீலகிரி, தேனி,நெல்லை மாவட்டங்களில் தடுப்பூசிகளை அதிகரிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

  ஒரே நேரத்தில் பலர் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்க உள்ளதால், கோவின் செயலியில் பதிவேற்றம் செய்ய அங்கன்வாடி ஊழியர்களை பயன்படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. ரோட்டரி சங்கங்கள் , தனியார் தொண்டு நிறுவனங்கள் , ஆசிரியர்கள் , வருவாய்த் துறையினர் , உள்ளாட்சி துறையினர் வாயிலாக பொது மக்களுக்கு தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை18 வயதுக்கு மேற்பட்டோரில் 3 கோடியே 48 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

  கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கொரோனா கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாநகராட்சியில் மட்டும் 300, பிற இடங்களில் ஆயிரத்து 166 முகாம்கள் என, மொத்தம் ஆயிரத்து 466 முகாம்களில் ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளன. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  Also Read : தமிழ்நாட்டில் பாரதியாருக்கு உரிய கௌரவம் கிடைக்க வேண்டும் - சத்குரு வேண்டுகோள்

  சேலத்தில் நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாம்களுக்காக தேர்தலில் வழங்கப்படும் பூத் சிலிப் போலவே, வீடு வீடாக சென்று அதிகாரிகள் டோக்கன்களை வழங்கினர். டோக்கன்களை வழங்கும் பணிகளை, அஸ்தம்பட்டியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 356 இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: