• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ட்ரிங்ஸ், நான் வெஜ் சாப்ட்ருக்கேன்னு ஞாயிறு தடுப்பூசி போடாமல் எஸ்கேப் ஆவோருக்கு சனிக்கிழமை முகாம்...

ட்ரிங்ஸ், நான் வெஜ் சாப்ட்ருக்கேன்னு ஞாயிறு தடுப்பூசி போடாமல் எஸ்கேப் ஆவோருக்கு சனிக்கிழமை முகாம்...

Ma Subramaniam

Ma Subramaniam

இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். அசைவ பிரியர்கள், மதுப்பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள். இவற்றை சாப்பிட்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்திகளை நம்புகிறார்கள்.

  • Share this:
    மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் "நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை " மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன்,

    "செவ்வாய், வியாழக் கிழமைகளில் பல் மருத்துவ வாகனம் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சேவையை மேற்கொள்ளும்.
    அரசு பள்ளிகளுக்கும் இந்த வாகனம் அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு பல் பரிசோதனை, சிகிச்சை மேற்கொள்ளப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இது போன்ற கூடுதல் வாகனங்கள் வாங்கப்படும்.53 லட்சம் டோஸ் கோவிட் தடுப்பு மருந்துகள் தற்போது கையிருப்பில் உள்ளது. முதல் தவணை தடுப்பூசி 67% மற்றும் இரண்டாவது தவணை 25% பேர் போட்டுள்ளனர். 30.42 லட்சம் பேர் இரண்டாவது தவணை உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை.

    Also read:  பெண்ணின் வாழ்க்கையில் புயலாய் நுழைந்த ‘போலீஸ்’ நண்பர்!

    மதுப்பிரியர்கள் - அசைவப்பிரியர்கள்:

    இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். அசைவ பிரியர்கள், மதுப்பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள். இவற்றை சாப்பிட்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்திகளை நம்புகிறார்கள். இது தவறு. எனினும் அவர்களையும் தடுப்பூசி போடச் செய்யும் விதமாக இவ்வாரம் சனிக்கிழமை முகாம் நடத்துகிறோம். 50,000 முகாம்கள் சனிக்கிழமை நடத்தப்படும். சென்னை மாநகராட்சியில் 1600 முகாம்களின் எண்ணிக்கை 2500 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

    Also read:  விராட் கோலிக்காக இதை செய்தாக வேண்டும் – ரெய்னா கோரிக்கை

    சந்தைகளில் பண்டிகை கால கூட்டத்தில் மக்கள் முக கவசம் தொடர்ந்து அணிய வேண்டும். கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படாது." என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: