ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம்: 30 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது!

தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம்: 30 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது!

தடுப்பூசி

தடுப்பூசி

இதுவரை இல்லாத வகையில், அதிகம் பேர் பயன் பெறும் முகாமாக, இன்றைய முகாம் இருக்கும்.மக்கள் வீட்டின் அருகில் நடக்கும் முகாம்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதற்காக 30 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற 4 மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர்  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதை தொடர்ந்து இன்று 5வது மெகா  கொரோனா தடுப்பூ முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

  ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் என மொத்தம் 30 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 20 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். அதன்படி, இன்றைய தினம் 2வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதுவரை இல்லாத வகையில், அதிகம் பேர் பயன் பெறும் முகாமாக, இன்றைய முகாம் இருக்கும்.மக்கள் வீட்டின் அருகில் நடக்கும் முகாம்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இன்று இரவு 7 மணிவரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: உச்சத்தில் தக்காளி விலை..! மேலும் அதிகரிக்க வாய்ப்பு

  பரிசுகள் அறிவிப்பு:

  பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங் மிஷின், மிக்ஸி, பிரஷர் குக்கர், ஆண்ட்ராய்டு செல்போன் என ஏராளமான பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Tamilnadu