கொரோனா குறையாத மாவட்டங்களுக்கு தளர்வுகள் வேண்டாம் - முதல்வரிடம் மருத்துவக் குழு வலியுறுத்தல்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொரோனா குறையாத மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்படவேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மருத்துவக் குழு வலியுறுத்தியுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா தொற்று குறையாத மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கவேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மருத்துவக் குழு வலியுறுத்தியுள்ளது.

  கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துவங்கியது. கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

  ஊரடங்கு வருகின்ற 21ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கு மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மருத்துவ வல்லுனர்களுடனானஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றநிலையில் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. தொற்று அதிகம் உள்ள 8 மாவட்டங்களில் தளர்வுகள் வேண்டாம் என மருத்துவ வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளது. தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், மால்கள் திறக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வணிகர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கவும் மருத்துவ வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர். பொதுப் போக்குவரத்து ஜவுளி மற்றும் நகைக் கடைகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
  அடுத்தபடியாக காவல்துறை தலைவர் திரிபாதி மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
  Published by:Karthick S
  First published: