ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீட் இல்லாமலே நீட்டாக படித்துள்ள மருத்துவ மாணவர்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு..

நீட் இல்லாமலே நீட்டாக படித்துள்ள மருத்துவ மாணவர்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு..

நீட் இல்லாமலே நீட்டாக படித்துள்ள மருத்துவ மாணவர்கள்: அமைச்சர் பாராட்டு

நீட் இல்லாமலே நீட்டாக படித்துள்ள மருத்துவ மாணவர்கள்: அமைச்சர் பாராட்டு

இந்தியாவில் அரசு தனியார் சேர்த்து 578 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 70 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சென்னை மருத்துவ கல்லூரியின் 186 வது இளங்கலை மருத்துவ நிறைவு தின விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மருத்துவ படிப்பு நிறைவு செய்த 250 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் சான்றிதழ் வழங்கினார். இதில், 20 மாணவர்கள் தங்கப்பதக்கம், 42 மாணவர்கள் சான்றிதழ் பெற்றனர்.

இந்நிகழ்வில் பேசிய சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன், சென்னை மருத்துவக் கல்லூரி பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரி ஆகும். பலருக்கு கனவாக மட்டுமே உள்ள மருத்துவ படிப்பு இன்று உங்களுக்கு நனவாகியுள்ளது.

கொரோனா காலத்தில் 60 ஆயிரம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை வழங்கப்பட்டு 95% பேர் குணமடைந்து உள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக கரும்பூஞ்சை நோயாளிகளுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதி நவீன வசதிகளுடன் 47 படுக்கைகள் கொண்ட ஐசியூ வார்டு உருவாக்கப்பட்டது என்றார்.

இந்நிகழ்வில் பேசிய மருத்துவக் கல்லூரி இயக்குநர் ,சிறப்பான பயிற்சியை பெற்றுள்ள மாணவர்கள் கிராமப்புறத்தில் சேவை ஆற்ற ஆர்வம் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, சான்றிதழள்களை வழங்கி பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  நீட் தேர்வு வருவதற்கு முன்பும் சரி வந்த பின்பும் சரி, மருத்துவ பயில விரும்பும் மாணவர்களுக்கு முதல் தேர்வு சென்னை மருத்துவ்க் கல்லூரி. அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்றவர்கள் தான் இந்த கல்லூரிக்கு வர முடியும். இந்த 250 மாணவர்கள் தான் தமிழகத்தின் முதல் இடத்தில் இருப்பவர்கள்.

என் மகன் மருத்துவ பட்டம் பெறுவதை மாஸ்கோவுக்கு நேரில் சென்று பார்த்த அனுபவம் நினைவில் உள்ளது. லண்டனில் விமானத்தை தவறவிட்டு சரியான நேரத்துக்கு சென்று அடையுமா என்ற பதட்டத்தில் இருந்து பின்பு நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று நான் அடைந்த சந்தோசத்தை போல தான் நீங்களும் மிகவும் சந்தோசமாக இருப்பீர்கள். இந்த பிள்ளைகளை பெற்ற போது இருந்த சந்தோசத்தை விட மருத்துவராக பார்க்கும் போது 100 மடங்கு அதிக சந்தோசம் இருக்கும்.

Also Read :இரட்டை வேடம் போடும் பாஜக.. பொன்னையன் பேச்சால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு

இந்தியாவில் அரசு தனியார் சேர்த்து 578 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 70 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இது தமிழகத்துக்கு கிடைத்த வாய்ப்பு. உலகம் முழுவதும் தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது கொரோனா.

தற்போது குரங்கு அம்மை உலகில் பரவி வருகிறது. வளர்ந்த நாடுகளிலிருந்து இந்த நோய் பரவியுள்ளது.

நீட் இல்லாமலே நீட்டாக வந்திருக்கும் மாணவர்கள் நீங்கள். உங்களுக்கு அடுத்து வந்த மாணவர்கள் அனைவரும் நீட்டால் படாத பாடுபடுகிறார்கள். நீட் மட்டுமே தகுதியான மாணவர்களை உருவாக்கும் என சிலர் கூறுகின்றனர். நீட் இல்லை என்றாலும் நாங்கள் தகுதியானவர்கள் என்று நிரூபித்து உள்ளீர்கள் நீங்கள் என்று அவர் கூறினார்.

Published by:Esakki Raja
First published:

Tags: Ma subramanian