மறைந்த மதுசூதனனின் மொத்த மருத்துவ செலவை அதிமுக ஏற்றது... எவ்வளவு தெரியுமா?

மதுசூதனன்

அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த மதுசூதனனின் மருத்துவ செலவை அக்கட்சியே ஏற்றுள்ளது.

 • Share this:
  மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் மொத்த மருத்துவ செலவை ஏற்ற அதிமுக, இதற்கான தொகையை அப்பல்லோ மருத்துவமனைக்கு செலுத்தியது.

  அதிமுக நிறுவனரும் நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தொடக்க காலத்தில் ரசிகர் மன்றம் வைத்தவர்களில் மதுசூதனனும் ஒருவர்.  அதிமுகவின் நீண்ட உறுப்பினரான அவர், அக்கட்சியின் அவைத்தலைவராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தவர். 80 வயதை கடந்த மதுசூதனன் உடல்நல குறைவுக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில்,  கடந்த 5ம் தேதி காலமானார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் தோழி சசிகலா உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

  இதையும் படிக்க: பட்ஜெட் கூட்டத் தொடர்: 4 சுங்கச்சாவடிகளை நீக்கும் அறிவிப்பு இடம்பெறுமா?


  இந்நிலையில், அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த மதுசூதனனின் மருத்துவ செலவை அக்கட்சியே ஏற்றுள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மதுசூதனனின் சிகிச்சைக்கான மொத்த மருத்துவ செலவுத் தொகை 26 லட்சத்து 74 ஆயிரத்து 63 ரூபாயை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அதிமுக செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: ‘எங்கே போனார் வேலுமணி’: எட்டு மணிநேரம் காணாமல் தவித்த காவல்துறையினர்!

  Published by:Murugesh M
  First published: