டெல்லியிலிருந்து மருத்துவ கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சென்னை வந்தன

மருத்துவ உபகரணங்கள்

டெல்லியிலிருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் முகக்கவசங்கள், மருத்துவ கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தன.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம், தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் வெகுவாக குறைந்துள்ளது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை முற்றிலுமாக தடுப்பதில் தமிழக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

    அதன்படி 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக செயல்படுகிறது. ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அத்துடன், அரசுடன் இனைந்து தனியார் மருத்துவமனைகள், தொழிற்சாலைகளும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. இதற்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

    மேலும், தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை, தமிழகத்திலேயே கூடுதலாக உற்பத்தி செய்யவும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வரவழைக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லியிலிருந்து இந்திய விமானப்படை தனி விமானம் ஒன்று சென்னை பழைய விமானநிலையம் வந்தது. அதில் 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் வந்தன. முகக்கவசங்கள், மருத்துவ பரிசோதனை கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்தன. ஏா் இந்தியா லோடா்கள், விமானப் படை வீரா்கள் கண்காணிப்பில் அந்த பார்சல்களை விமானத்திலிருந்து இறக்கினா்.

    Must Read : தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

     

    அதன்பின்பு சென்னை விமானநிலைய அதிகாரிகள் அந்த மருத்துவ உபகரணங்களை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் வாகனம் மூலம் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனா்.
    Published by:Suresh V
    First published: