ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு 19ஆம் தேதி தொடக்கம் : மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு 19ஆம் தேதி தொடக்கம் : மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

19ம் தேதி மற்றும் 20ம் தேதி விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறுகிறது. 7.5% இட ஒதுக்கீட்டு பிரிவுக்கான கலந்தாய்வு 20ம் தேதி நடைபெறும். அன்று மாலையே ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். சிறப்பு பிரிவினர் தவிர மற்றவருக்கான கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி துவங்குகிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அறிவித்துள்ளார்.

  ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்ட அமைச்சர் இதனை தெரிவித்தார்.

  தமிழகத்தில் மொத்தம் 8,225 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 848 போக, அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 6,067 ஆகும். மேலும் 1,380 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கான பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன.

  இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு 22 ஆயிரத்து 736 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 22054 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் 8029 விண்ணப்பங்கள் ஆண்கள், 14024 பெண்கள் மற்றும் ஒரு மாற்று பாலினத்தனவர் உள்ளார். ஆண்களை விட பெண்களின் விண்ணப்பங்கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

  7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 454 ஆகும். இதே போன்று பல் மருத்துவக் கல்லூரிகளில் 104 இடங்கள் உள்ளன. எனவே, மொத்தம் 558 இடங்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு உள்ளன. இந்த இடங்களுக்கு 2695 விண்ணபங்கள்  பெறப்பட்டன. அதில் 2674 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்ப்பட்டன. அதில் 764 ஆண்கள், 1910 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த பிரிவிலும் ஆண்களை விட் பெண்களே அதிகம் விண்ணப்பித்துள்ளனர்.

  நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 1,310 எம்பிபிஎஸ் இடங்களும் 740 பி டி எஸ் இடங்களும் உள்ளன. இதற்கு 13,470 விண்ணபங்கள் பெறப்பட்டன. அதில் 13272 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் 4,758 ஆண்கள், 8,513 பெண்கள், ஒரு மாற்று பாலினத்தவர் ஆவார்.

  மேலும் 216 விளையாட்டு பிரிவுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 356 விண்ணப்பங்கள் முன்னாள் படைவீர் குடும்பத்தினர் பிரிவின் கீழ் பெறப்பட்டன.

  அரசு ஒதுக்கீட்டு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன

  கடந்த இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சற்று அதிகரித்துள்ளன.

  2020-21ம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 4469 எம் பி பி எஸ் இடங்கள் மற்றும்  1,319 பி டி எஸ் இடங்கள் இருந்தன. இதற்கு 2,3971 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

  2021-22ம் ஆண்டில் 5,932 எம் ப் பி எஸ் மற்றும் 1460 பி டி எஸ் இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இருந்தன. இதற்கு 24,951 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

  இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் இடங்களும் அதிகரித்துள்ளன. அதே போல் விண்ணப்பங்களும் சற்று அதிகரித்துள்ளன.  இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் 6,521 எம் பி பி எஸ் இடங்களும் 1,484 பி டி எஸ் இடங்களும் உள்ளன. இதற்கு 2,5431 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

  நிர்வாக ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ளன

  கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும் பொழுது இந்த ஆண்டு நிர்வாக ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் சற்று குறைந்துள்ளன.

  2020-21ம் ஆண்டு நிர்வாக ஒதுக்கீட்டில் 1,060 எம் பி பி எஸ் இடங்கள் மற்றும் 635 பிடிஎஸ் இடங்கள் இருந்தன. இதற்கு 14,006 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

  2021-22 ம் ஆண்டு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 1,286 எம் பி பி எஸ் இடங்கள் மற்றும் 1460 பி டி எஸ் இடங்கள் இருந்தன. இதற்கு 14,981 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

  இந்த ஆண்டு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரித்தாலும் விண்ணப்பங்கள் சற்று குறைந்துள்ளன. தற்போது நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 1310 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 740 பி டி எஸ் இடங்கள் உள்ளன. மொத்தம் 13,470 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

  கலந்தாய்வு தேதிகள்

  19ம் தேதி மற்றும் 20ம் தேதி விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறுகிறது.

  7.5% இட ஒதுக்கீட்டு பிரிவுக்கான கலந்தாய்வு 20ம் தேதி நடைபெறும். அன்று மாலையே ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். சிறப்பு பிரிவினர் தவிர மற்றவருக்கான கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும்.

  பொது பிரிவினருக்கான அதாவது சிறப்பு பிரிவினர் அல்லாத அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு இணையவழி மூலம் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும். முதல் சுற்றின் முடிவுகள் 26ம் தேதி இணையத்தில் வெளியிடப்படும். 27ம் தேதி மற்றும் 28ம் தேதி சான்றிதழ் சரிபார்க்கப்படும். 30ம் தேதி முதல் சுற்றின் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

  நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும்.

  முதல் சுற்றில் இடம் ஒதுக்கப்பட்டவர்கள் நவம்பர் 4ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

  இரண்டாவது சுற்று கலந்தாய்வு நவ 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்.  இரண்டாம் சுற்று முடிவுகள் 15ம் தேதி வெளியிடப்படும்.  இரண்டாம் சுற்றில் இடம் கிடைத்தவர்கள் நவ. 21-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

  முழுமைச் சுற்று டிசம்பர் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும். இந்த சுற்றில் இடம் ஒதுக்கப்பட்டவர்கள் டிச 16ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

  மேலும் விட்டு போன இடங்களை நிரப்ப இறுதி சுற்று 17ம் தேதி நடைபெறும். இந்த சுற்றில் இடம் ஒதுக்கப்படுபவர்கள் டிச 20ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

  எம்.பி.பி.எஸ்.பி.டி.எஸ் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் நாள் நவம்பர் 15ம் தேதி ஆகும்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Medical counseling, Medical Courses, Tamil Nadu govt