தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு கடந்த 18ம் தேதி தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் இடங்கள் நிரப்ப மூன்று நாட்கள் கலந்தாய்வு நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு கோட்டா இடங்கள் என 405 இடங்களில் 399 இடங்கள் நிர்ப்பப்பட்டன. தனியார் கல்லூரிகளில் ஆறு பல் மருத்துவ இடங்கள் மட்டும் பாக்கி இருந்தன. 21ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. அதில் 60 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 23ம் தேதி பொதுபிரிவினருக்கான முதல் நாள் கலந்தாய்வு தொடங்கியது.
அதில் தரவரிசைப்பட்டியலில் முதல் 15 இடம்பெற்ற மாணவர்கள் அகில இந்திய கோட்டாவில் இடம் கிடைத்ததால் அவர்கள் பங்குபெறாமல் கலந்தாய்வு தொடங்கியது. அடுத்த பத்து மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை சுகாதாரத் துறை அமைச்சர் கலந்தாய்வு அரங்கில் நேரில் வழங்கினார். அன்றைய கலந்தாய்வில் 308 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அன்றிரவு நிவர் புயல் காரணமாக கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்தது.
தற்போது நிலைமை சீராகியிருப்பதால் நாளை முதல் மீண்டும் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடர்கிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.