தமிழகத்திற்கு புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகள்... மத்திய அரசு ஒப்புதல்!

தமிழகத்திற்கு புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகள்... மத்திய அரசு ஒப்புதல்!
கோப்பு படம்
  • News18
  • Last Updated: November 27, 2019, 5:23 PM IST
  • Share this:
தமிழகத்தில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

தமிழகம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 6 மாநிலங்களில், மத்திய அரசின் உதவித் திட்டத்தின்கீழ் 75 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.


இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு தலா 195 கோடி ரூபாயும், மாநில அரசு தலா 130 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, புதிதாக தொடங்கப்பட உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு 600 கோடி ரூபாயை தமிழக அரசு முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ஏற்கெனவே தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் நிலையில், இந்த 3 கல்லூரிகள் மூலம் தலா 150 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 450 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இதனால், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 4,600 ஆக உயர வாய்ப்புள்ளது.

Also see...
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading