புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு மார்ச்சில் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்

புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு மார்ச்சில் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்
எடப்பாடி பழனிசாமி
  • Share this:
தமிழகத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழகத்தில் புதிதாக மருத்துவ கல்லூரி தொடங்க மத்திய அரசுக்க்கு தமிழக அரசு விண்ணப்பித்த நிலையில் 9 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். மார்ச் 4 ஆம் தேதி கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கும், ஐந்தாம் தேதி நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். ஐந்தாம் தேதி பிற்பகலில் கரூர் மற்றும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார்.


தொடர்ந்து ஏழாம் தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் எட்டாம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கும், 14ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்