அன்புமணி மீதான அதிகாரத் துஷ்பிரயோக வழக்கில் சிபிஐ நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

news18
Updated: August 19, 2019, 11:58 AM IST
அன்புமணி மீதான அதிகாரத் துஷ்பிரயோக வழக்கில் சிபிஐ நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
அன்புமணி ராமதாஸ்
news18
Updated: August 19, 2019, 11:58 AM IST
மருத்துவக்கல்லூரிகளுக்கு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கில் ஆகஸ்ட் 29 முதல் மீண்டும் விசாரணை நடைபெறும் என்று டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தனது பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி அளித்ததாக கூறி அன்புமணி ராமதாஸ் மீது சிபிஐ வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனை தொடந்து டெல்லி ரோஸ் அவன்யூ சி.பி.ஐ நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை தொடங்கியது.


அப்போது நீதிபதி, தனியார் மருத்துவ கல்லூரிகளை இந்திய மருத்துவ கவுன்சில் சோதனை நடத்திய போது எடுத்த வீடியோ ஆதாரங்களை வழங்க நீதிபதி அஜய் குமார் உத்தரவிட்டு வழக்கை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று முதல் விசாரணை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது அன்புமணி உள்ளிட்ட 6 பேர் இன்று ஆஜராகவில்லை.

First published: August 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...