முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் 1000 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம்... இன்ஃபுளூயன்சா வைரஸ் பரவலைத் தடுக்க நடவடிக்கை.

தமிழகத்தில் 1000 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம்... இன்ஃபுளூயன்சா வைரஸ் பரவலைத் தடுக்க நடவடிக்கை.

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

சென்னையில் மட்டும் 200 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்புக் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டெங்கு, இன்ப்ளுயன்ஸா, நிமோனியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் இன்று மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 200 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் எனவும், பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்புச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

First published:

Tags: Tamil Nadu