மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - ஆளுநர் ஒப்புதளிக்க தாமதம்

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - ஆளுநர் ஒப்புதளிக்க தாமதம்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுவதால், இந்த ஆண்டில் இடஒதுக்கீடு வழங்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நீட் தேர்வு காரணமாக, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வது சவாலானதாக உள்ளது. எனவே, நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

  ஆனால், இந்த சட்டத்துக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.  இதற்கிடையே, நாளை மாலை ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடுத்துரைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Published by:Sankar
  First published: