முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கள்ளக்குறிச்சி வன்முறை: யூடியூப் சேனல்களின் செயலுக்கு நீதிமன்றம் கண்டனம்.. நடவடிக்கை எடுக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி வன்முறை: யூடியூப் சேனல்களின் செயலுக்கு நீதிமன்றம் கண்டனம்.. நடவடிக்கை எடுக்க உத்தரவு

கலவர பூமியான கள்ளக்குறிச்சி..

கலவர பூமியான கள்ளக்குறிச்சி..

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக யூடியூப் சேனல்கள் விசாரணை நடத்துவதை தடுக்க வேண்டும். அதுபோன்ற யூடியூப் சேனல்களை தடை செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மீடியா டிரையல் நடத்திய யூ டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நேற்று நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தைக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, கலவரத்துக்கு அவர்தான் பொறுப்பு என்றும் கூறியது.

நேற்று நடந்த கலவரம் திட்டமிட்ட வன்முறை என்று தெரிவித்த நீதிபதி, மாணவர்களின் சான்றிதழ் எரிக்கப்பட்டுள்ளன. 4500 மாணவர்களின் எதிர்காலம் என்ன என்றும் கேள்வி எழுப்பியது. கலவரத்துக்கு யார் காரணம் என்பதை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும் என்றும் கருப்பு சட்டை அணிந்த கலவரக்காரர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், போலீசார் விசாரணையில் தங்களது பவரை காட்ட வேண்டும் என்று கூறியது.

கலவரகாரர்களை கைது செய்ய சிறப்பு படை அமைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்,  வாட்ஸ் அப் குரூப் அட்மீனை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சில சமூக ஊடகங்கள் மீடியா டிரையல் நடத்தியிருப்பதாக தெரிவித்த நீதிபதி, மீடியா டிரையல் நடத்திய யூ டியூப் சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. மறு பிரேத பரிசோதனை நடத்தலாம் - நீதிமன்றம் அனுமதி

வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். டிராக்டர் கொண்டு பஸ்சை சேதப்படுத்துவதெல்லாம் சகித்து கொள்ளவே முடியாது என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி சதீஷ் குமார், வழக்கு விசாரணை அறிக்கையை  29ம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.

First published:

Tags: Chennai High court, Girl dead, Kallakurichi