முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் மீது ஒரு எப்ஐஆர் கூட இல்லை - சமூக ஆர்வலர் மேதா பட்கர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் மீது ஒரு எப்ஐஆர் கூட இல்லை - சமூக ஆர்வலர் மேதா பட்கர்

மேதா பட்கா்

மேதா பட்கா்

Thoothukudi : தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்த சிபிஐ குற்றப்பத்திரிக்கையில், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையினர், உத்தரவிட்ட அதிகாரிகள் வெறுமனே சாட்சிகளாகவே சேர்க்கப்பட்டுள்ளனர் என மேதா பட்கா் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையினர் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் வெறுமனே சாட்சிகளாகவே சேர்க்கப்பட்டுள்ளனர். உண்மையான குற்றவாளிகள் மீது ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என மேதா பட்கா் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் உயிர்ச் சூழல் காக்க களமாடி படுகொலையுண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நான்காம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் மற்றும் உயிர்ச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில்  நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர் மேதா பட்கர், செய்தியாளர்களிடம் பேசும்போது, தூத்துக்குடியில் 100 நாட்கள் அமைதியான முறையில் போராடிய அப்பாவி மக்கள் மீது காவல் துறையினர் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் அப்பாவி மக்களை குற்றவாளிகளாக தெரிவித்துள்ளது.

சிபிஐ என்பது நடுநிலையான, நேர்மையான அமைப்பு இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒரு காலத்தில் மக்கள் எந்த பிரச்சினை என்றாலும் சிபிஐ விசாரணை கோரினார்கள். ஆனால் தற்போது யாருமே சிபிஐ விசாரணையை கோருவதில்லை. ஆனால் தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையினர் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் வெறுமனே சாட்சிகளாகவே சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் மீது ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என்பதையும் கடுமையாக கண்டிக்கிறோம்.

மேலும், இந்த வழக்கு விசாரணை மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி கிடைத்துள்ளது. ஆனால் நீதி இன்னும் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 4 பேருக்கு இன்னும் வேலை வழங்கப்படவில்லை.

Must Read : முன்பதிவு பெட்டிகளில் ஏறி வடமாநிலத்தவர்கள் அட்டகாசம்.. பயணிகள் வாக்குவாதம் - செங்கல்பட்டில் 1 மணிநேரம் நிறுத்தப்பட்ட ரயில்

ஸ்டெர்லைட் நிறுவனம் மகராஷ்டிரா மற்றும் குஜராத் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிறுவனமாகும். தூத்துக்குடி மக்களும் அந்த நிறுவனத்தை நிராகரித்துள்ளனர். அந்த நிறுவனம் மீண்டும் செயல்பட தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கக்கூடாது. ஸ்டெர்லைட் நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டால் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றார் மேதா பட்கர்.

செய்தியாளர் - பி. முரளி கணேஷ், தூத்துக்குடி.

First published:

Tags: Thoothukudi, Thoothukudi gun shoot, Thoothukudi Sterlite