வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தற்போதைய காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவை விட 24 சதவீதம் குறைவாக மழை பெய்திருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

news18
Updated: July 27, 2019, 8:15 AM IST
வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கோப்புப் படம்
news18
Updated: July 27, 2019, 8:15 AM IST
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்த நிலையில், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கில் நிலவும் சுழற்சியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் நேற்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

முறையான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும், இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் உப்பளங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் உப்பளங்களில் இருந்து வாரப்பட்டு குவிக்கப்பட்டுள்ள உப்புகளும் தொடர் மழையால் கரைந்து வருவதால் உற்பத்தியாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறினார்.

தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தற்போதைய காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவை விட 24 சதவீதம் குறைவாக மழை பெய்திருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Loading...

Also see...

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...