தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் தொடர்மழை காரணமாக கோவை மாவட்டம் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

news18
Updated: August 6, 2019, 11:23 AM IST
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!
கோப்புப் படம்
news18
Updated: August 6, 2019, 11:23 AM IST
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது. கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக நொய்யல் ஆற்றில் அதிகளவு நீர் பெருக்கெடுத்து ஓடியது.

விழுப்புரம் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதேபோல், செஞ்சி, திண்டிவனம், திருக்கோயிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மழையுடன் சேர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் உற்சாகமடைந்தனர். மேலும் ஆங்காங்கே பெய்யும் மழையால், ஏரிகள், குட்டைகள் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் தொடர்மழை காரணமாக கோவை மாவட்டம் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கோவை குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நொய்யல் ஆற்றில் அதிக அளவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Loading...

மேலும் பேரூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி ஆற்றுநீர் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் நிலத்தடி நீர் உயரக்கூடும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also see...

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...