அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தலா 10 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

news18
Updated: August 22, 2019, 1:24 PM IST
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்
கோப்புப் படம்
news18
Updated: August 22, 2019, 1:24 PM IST
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

மேலும், வேலூர் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் நீலகிரி தேனி திண்டுக்கல் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தலா 10 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால்அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Loading...

Also see...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...