கோவில்பட்டியில் செல்போன் மூலம் ஆர்டர் எடுத்து ஊரடங்கை மீறி இறைச்சி விற்பனை: கடைகளுக்கு சீல் வைத்த வட்டாட்சியர்

கொரோனா முழு ஊரடங்கை மீறி கோவில்பட்டியில் திறந்திருந்த 4 இறைச்சிக் கடைகளுக்கு வட்டாட்சியர் சீல் வைத்தார். மேலும், கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் செல்போன் மூலம் ஆர்டர் எடுத்து ஊரடங்கை மீறி இறைச்சி விற்பனை: கடைகளுக்கு சீல் வைத்த வட்டாட்சியர்
சீல் வைக்கப்படும் கடை
  • Share this:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த 4 வாரங்களாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், இறைச்சி விற்பனை நடைபெறுவதாக கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து வட்டாட்சியர் மணிகண்டன் நகரில் சோதனை மேற்கொண்டார். கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள ஆட்டு இறைச்சி கடையில் விற்பனை நடைபெறுவதை கண்டறிந்து, அந்த கடைக்கு சீல் வைத்தது மட்டுமின்றி, அங்க இருந்த உரிமையாளர், பணியில் இருந்த 4 ஊழியர்கள் என 5 பேரையும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார்.

கடை சீல்வைப்பு



மேலும் அவர்கள் இறைச்சி வெட்ட பயன்படுத்திய அரிவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தார். தொடர்ந்து பார்க் சாலையில் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள 3 கடைகளில் உள்பக்கமாக கடையை பூட்டி கொண்டு ஆடு, கோழி மற்றும் மீன் உள்ளிட்ட இறைச்சிகள் வெட்டப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையெடுத்து 3 கடைகளுக்கும் சீல் வைத்து, கடையின் உரிமையாளர்கள் 3 பேரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கடையினை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, செல்போன் மூலமாக வாடிக்கையாளர்களிடம் இறைச்சி ஆர்டர் எடுத்து, அவர்களுக்கு தேவைக்கு ஏற்ப இறைச்சியை வெட்டி கொடுத்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading