மதுரையில் போலீஸ் தாக்கியதில் கறிக்கடைக்காரர் உயிரிழப்பு? உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்!

மதுரையில் போலீஸ் தாக்கியதில் கறிக்கடைக்காரர் உயிரிழப்பு? உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்!
கோப்புப் படம்
  • Share this:
மதுரையில் போலீஸ் தாக்கியதில் கறிக்கடைக்காரர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, உடலை சாலையில் வைத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மதுரையில் நேற்று கறிக்கடை திறக்க வேண்டாமென ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், கருப்பாயூரணியில் அப்துல் ரஹீம் என்பவர் இறைச்சி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அங்கு வந்த 3 காவலர்கள் அவரை தாக்கியதாகவும், இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் இறந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

அவரின் உடலை சாலையில் போட்டு அவரது உறவினர்கள், அந்த பகுதி மக்கள் என முந்நூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து சடலம் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.


நிலையில் பிரேத பரிசோதனைக்கு ஒத்துழைக்குமாறு அவர்களிடம் போலீசார் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Also see...
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading