• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாம் பச்சை தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர் - ஸ்டாலின் புகழாரம்

நாம் பச்சை தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர் - ஸ்டாலின் புகழாரம்

சிஎஸ்கே பாராட்டு விழா

சிஎஸ்கே பாராட்டு விழா

தமிழர்கள் பச்சை தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர் என்று சிஎஸ்கே பாரட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

  • Share this:
    தமிழர்கள் பச்சை தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர் என்று சிஎஸ்கே பாரட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.ஐபிஎல் தொடரின் 14-வது சீசனில் சிஎஸ்கே அணி பட்டம் வென்றது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதை கொண்டாடும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    முதல்வருடன் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சுகாதராத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கலாநிதி வீரசாமி எம்.பி உள்ளிட்டோரும் வருகை தந்தனர். மேலும் சிஎஸ்கே கேப்டன் தோனி, முன்னாள் வீரர் கபில்தேவ், சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், இந்திய சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது சிஎஸ்கே வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். அதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 7-ம் நெம்பர் பொறித்த ஜெர்சியை தோனி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,தோனியின் ரசிகராகவே இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். என் தந்தை கலைஞர் எனது பேத்தி, பேரன் உட்பட எங்கள் குடும்பமே தோனியின் ரசிகர்கள். எனக்கும் கிரிக்கெட் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் உள்ளது. மேயராக இருந்த போது காட்சி போட்டியில் ஆடி உள்ளேன், கிரிக்கெட் போட்டிகளை நடத்தி உள்ளேன். கார்கில் போரின் போது நடந்த சிறப்பு போட்டியின் போது எனக்கு கபில்தேவுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

    தமிழ்நாட்டு மக்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார் தோனி. நாம் பச்சை தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர். தோனியும் தலைவர் கலைஞரை போல கூல் ஆனவர். நெருக்கடியின் போதெல்லாம் கூலாகவே இருப்பார்கள் இருவரும்.தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களை மறக்கவே முடியாது.

    டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் என்றால் அது தோனி தான் என்று உருவாக்கி உள்ளார். நான் ஆட்சி ஏற்ற பின் அனைவரும் சொல்வார்கள் தினமும் ஒரு சிக்ஸர் அடிக்கிறேன் என்று. அப்போது எல்லாம் நான் தோனியை நினைத்து கொள்வேன். சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை விட அவர் சிறந்த கேப்டனாக நான் பார்க்கிறார். ஒரு அணியை வழிநடத்துவது சவாலான ஒன்று . சீனியர் முதல் இளம் வீரர்களை ஒருங்கிணைத்து தோனி ஈட்டியிருக்கும் வெற்றி ஆளுமைக்கான சான்று.

    இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்தமுடியாது, இது விளையாட்டிற்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும். அபார வெற்றியுடன் மீண்டு எழுந்திருக்கும் சென்னை அணியை வாழ்த்தி வணங்குகிறேன். நீங்கள் விளையாட்டை தொடருங்கள் நாங்கள் மக்கள் பணியை தொடர்கிறோம். தோனி நீங்கள் இன்னும் பல போட்டிகளுக்கு சென்னை அணியை வழிநடத்த வேண்டும் என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: