Home /News /tamil-nadu /

சேக்ஸ்பியரின் வாசகத்தை சுட்டிக்காட்டி சூர்யாவிற்கு வைகோ ஆதரவு!

சேக்ஸ்பியரின் வாசகத்தை சுட்டிக்காட்டி சூர்யாவிற்கு வைகோ ஆதரவு!

வைகோ - சூர்யா

வைகோ - சூர்யா

“இன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்” என்ற சேக்ஸ்பியரின் வாசகம்தான் சூர்யா பிரச்சினையில் நடந்துள்ளது.

  • News18
  • Last Updated :
புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை மூலமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

சிவக்குமார் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா , அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைத்தேர்வு நடத்துவது ஏன்?. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு நம் மீது திணிக்கப்படும் என்று எல்லாம் பேசினார்.

சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை உருவாக்கியது. பா.ஜ.கவினர் சூர்யாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அமைச்சர் கடம்பூர் ராஜூ, சூர்யாவுக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பினார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சூர்யாவின் கருத்திற்கு முதல் நபராக ஆதரவு தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையின் மூலமாக சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள் நடிகர் சூர்யாவை ஆதரித்து குரல் தந்தபோது நான் மகிழ்ந்தேன்.

நடிகர் சூர்யாவின் விளக்கத்தைப் பத்திரிகைகளில் படித்தபோது, அவரது மனிதாபிமானப் பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன். கலை உலகில் வெள்ளித் திரையில் ஒளிவிடும் நட்சத்திரம், அன்னை தெரசா போன்றவர்கள் செய்த தியாகப் பணியின் சாயல் சூர்யாவின் அகரம் பவுண்டேசனில் திகழ்வதை எண்ணி மிகவும் பரவசம் அடைந்தேன்.

நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது நன்மையாக முடிந்தது. “இன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்” என்ற சேக்ஸ்பியரின் வாசகம்தான் சூர்யா பிரச்சினையில் நடந்துள்ளது.போற்றுதலுக்குரிய சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ்ச் சமூகத்திற்கு தோள் கொடுத்து உயர்த்துவார்கள் எனப் பாராட்டுகிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: Actor Suriya, Vaiko

அடுத்த செய்தி