முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே" - வைகோ கருத்து!

"பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே" - வைகோ கருத்து!

வைகோ

வைகோ

Vaiko About prabhakaran | தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது - வைகோ.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருந்தால்  தனக்கு மகிழ்ச்சியே என மதிமுக நிறுவனர் வைகோ தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன் பிரபாகரன் இன்னும் உயிருடன் நலமுடன் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த தகவலையடுத்து பல அரசியல் தலைவர்கள் அவர்களது கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில், மதிமுக நிறுவனர் வைகோ அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்று அண்ணன் பழ.நெடுமாறன் தனக்கு வந்த தகவலை உலகத் தமிழர்களுக்கு இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

தமிழீழத் தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலைப் போர்க்களத்தில் தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்றப் போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர்.

என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் அண்ணன் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது என தெரிவித்தார்.

First published:

Tags: Chennai, LTTE, Prabhakaran, Vaiko