சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மதிமுக கட்சி கொடியை வைகோ ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவிற்கு மாநாடு நடத்தினோம். இந்த முறை கொரோனா காரணமாக காணொலி மூலம் கருத்தரங்கு நடத்துகிறது.
தமிழகம் முழுவதும் மதிமுகவினர் இன்று அண்ணா பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள்.
Also read... மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு - பேரவையில் சட்ட மசோதா தாக்கல்
தொடர்ந்து சூர்யா குறித்து பேசிய வைகோ, 3 பேர் நீட் தேர்வால் ஒரே நாளில் இறந்த அதிர்ச்சியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது கருத்தில் எந்தவிதமான உள்நோக்கம் இல்லை.
சூர்யா ஏராளமான மாணவர்களை எந்தவிதமான விளம்பரங்கள் இன்றி படிக்க வைத்து வருகிறார். அவர் ஒரு அறச்சிந்தனையாளர்.
சூர்யாவின் கருத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் பிரச்சினை செய்யக் கூடாது என்று தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதை தலைமை நீதிபதி ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் கிசான் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
அதனை தொடர்ந்து இன்று ட்விட்டரில் தன்னாட்சி தமிழகம் டிரெண்டாகி வருவது குறித்து செய்தியளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைகோ, தன்னாட்சி தமிழகம் என்பது மாநில சுயாட்சி தான். மாநில சுயாட்சி என்பது மதிமுக கட்சியின் உயிர் கொள்கை எனவும் தெரிவித்தார்.