• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாலியல் துன்புறுத்தல்: மாணவ மாணவியரிடையே போதிய விழிப்பு உணர்வு இல்லை - வைகோ

பாலியல் துன்புறுத்தல்: மாணவ மாணவியரிடையே போதிய விழிப்பு உணர்வு இல்லை - வைகோ

வைகோ கண்டனம்

வைகோ கண்டனம்

பாலியல் கொடுமைகள் காரணமாக தங்கள் பிள்ளைகள் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், பெற்றோர்கள் அதைக் கண்காணித்து, தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    கோவையில் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.  பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, மாணவ மாணவியரிடையே போதிய விழிப்பு உணர்வு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கோவையில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக, கோவையில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி, அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது. அவர் தம் கைப்பட எழுதி இருந்தபடி, தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்தப் பிரச்சினை, பள்ளி முதல்வரின் கவனத்திற்கு வந்தபோது, அவர் முறையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே, இந்தத் தற்கொலை நிகழ்ந்து இருக்கின்றது. அதற்காக, அவரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். தற்போது இந்தியாவிலேயே ஆகக் கூடுதலாக, தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் பதிவு ஆகி இருக்கின்றன. அந்த அளவிற்கு அந்தச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டு இருக்கின்றது. என்றாலும், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, மாணவ மாணவியரிடையே போதிய விழிப்பு உணர்வு இல்லை.

    பாலியல் கொடுமைகள் நிகழாத வண்ணம்,  அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும்  ஆசிரியர்களுக்கு உண்டு. பெற்றோரும் உரிய கவனம் செலுத்த வேண்டும். தங்கள் பிள்ளைகள் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதைக் கண்காணித்து, தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும்; ஆறுதலாக இருக்க வேண்டும்.

    இதையும் படிங்க: நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம்: பாமக மாவட்ட செயலாளர்!


    மாணவி எழுதி வைத்த குறிப்பில் மேலும் இருவர் பெயரைக் குறிப்பிட்டு உள்ளார். அதுகுறித்தும், காவல்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கேட்டுகொண்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: