Home /News /tamil-nadu /

குடியரசு தின அலங்கார அணிவகுப்பு ஊர்தி விவகாரம் : திராவிடர் கழகம் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக ஆதரவு

குடியரசு தின அலங்கார அணிவகுப்பு ஊர்தி விவகாரம் : திராவிடர் கழகம் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக ஆதரவு

வைகோ

வைகோ

Vaiko : தமிழ்நாடு முதல்வரும், தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து எழுப்பிய கண்டனக் குரலை டெல்லி அரசு முரட்டுத்தனமாக ஏற்கமறுத்துவிட்டது என வைகோ தெரிவித்துள்ளார்.

    திராவிடர் கழகம் ஜனவரி 26ஆம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும், கூட்டாட்சி நெறிமுறைகளை குழிதோண்டி புதைக்கும்வகையிலும் நரேந்திர மோடி அரசு முடிவெடுத்து செயல்படுவது, வன்மையான கண்டனத்திற்கு உரியது என்றும் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியவிடுதலையின் பவள விழாவை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 26 குடியரசு நாளில், புதுடெல்லியில் நடைபெறும் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்புக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

    மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், விடுதலைக் கவிஞர் பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்ற தமிழ்நாடு அரசின் அணிவகுப்பை, மத்திய அரசு நியமித்த பத்து பேர் கொண்ட குழு நிராகரித்துவிட்டது.

    தமிழ்நாடு முதல்வரும், தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து எழுப்பிய கண்டனக் குரலை டெல்லி அரசு முரட்டுத்தனமாக ஏற்கமறுத்துவிட்டது. பலமுறை இதுகுறித்து எடுத்துவிளக்கிய பின்பும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும், கூட்டாட்சி நெறிமுறைகளை குழிதோண்டி புதைக்கும்வகையிலும் மோடி அரசு முடிவெடுத்து செயல்படுவது, வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்!

    டெல்லி அரசு அனுமதிக்க மறுத்தஊர்திகள், தமிழ்நாடு அரசு நடத்தும் குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் என்று முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த பின்பும், ஒன்றிய அரசு மாநில உணர்வுகளை மதிக்கத் தயாராக இல்லை என்பது தெரிந்துவிட்டது.

    Read More : முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதான18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து

    குடியரசு நாள் விழாஊர்வலத்தில், தமிழக மக்களையும் மக்களாட்சி பண்புகளையும் இழிவு செய்யும், ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கினைக்கண்டித்து, ஜனவரி 26 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளதை மறுமலர்ச்சி திமுக வரவேற்கிறது; பாராட்டுகிறது!

    Must Read : அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் - அமைச்சர் பொன்முடி

    அனைத்துக் கட்சி அலுவலகங்கள்முன்பும், வீடுகளின் முன்பும் தனி நபர் இடைவெளிவிட்டு, அமைதி வழியில் கண்டன குரல் எழுப்பிடுமாறு தமிழ் மக்கள்அனைவரையும் மறுமலர்ச்சி திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Dravidar Kazhagam, MDMK, Vaiko

    அடுத்த செய்தி