”உடம்பை பார்த்துக்கோங்க...” மேடையில் கண்டித்த ஸ்டாலின்.. கண்கலங்கிய வைகோ..

திராவிட இயக்கத்திற்கு தான் நிரந்தர தளபதி என்றும், வைகோ நிரந்தர போர்வாள் என்றும் கூறிய ஸ்டாலின், இருவரும் களத்தில் ஒன்றாக நிற்பதாக தெரிவித்தார்.

”உடம்பை பார்த்துக்கோங்க...” மேடையில் கண்டித்த ஸ்டாலின்.. கண்கலங்கிய வைகோ..
திராவிட இயக்கத்திற்கு தான் நிரந்தர தளபதி என்றும், வைகோ நிரந்தர போர்வாள் என்றும் கூறிய ஸ்டாலின், இருவரும் களத்தில் ஒன்றாக நிற்பதாக தெரிவித்தார்.
  • News18 Tamil
  • Last Updated: September 15, 2019, 10:41 PM IST
  • Share this:
தமிழகத்தை திட்டமிட்டு பழிவாங்கும் மத்திய அரசு, இந்தியை திணித்துக் கொண்டே இருப்பதாகவும், தமிழகம் அதை எதிர்த்துக் கொண்டே இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெறுகிறது.

இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர், தான் பங்கேற்கும் முதல் மதிமுக மாநாடு இதுதான் என்றும், இது தனக்கு வாழ்நாள் பெருமை என்றும் தெரிவித்தார்.


திமுகவுக்கும் மதிமுகவுக்கும் மேடைகள் வேறு, ஆனாலும் கொள்கை ஒன்றுதான் எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், தமிழினத்தின் மொழி மற்றும் கலாசாரத்திற்கு திமுகதான் காவலன் என தெரிவித்தார். திராவிட இயக்கத்திற்கு தான் நிரந்தர தளபதி என்றும், வைகோ நிரந்தர போர்வாள் என்றும் கூறிய ஸ்டாலின், இருவரும் களத்தில் ஒன்றாக நிற்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், வைகோ தமது உடல் நலனை பேணி பாதுகாக்குமாறு, சகோதரன் என்ற முறையில் கண்டித்து கூறுவதாக தெரிவித்தார். அப்போது ஸ்டாலினின் வார்த்தைகளால் நெகிழ்ந்துபோன வைகோ, மேடையிலேயே கண்கலங்கினார்.

Video: 
Instagram இல் இந்த இடுகையை காட்டு

 

அன்று News18 Tamil Nadu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@news18tamilnadu)
First published: September 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்