• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வைகோ வலியுறுத்தல்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வைகோ வலியுறுத்தல்

வைகோ

வைகோ

விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
விவசாயிகளின் தற்கொலையை தடுக்க அவர்கள் வாங்கிய பயிர்க் கடன், விவசாய கடன்களின் அசலையும், வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 30 ஏக்கரில் பயிரிடப்பட்ட சவுக்கு, தேக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் கஜா புயலால் சேதமடைந்ததால், மனமுடந்த விவசாயி திருச்செல்வம், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது குடும்பத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயல் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்றார். மேலும் இப்பகுதி விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: