தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும், 22 மொழிகளையும் ஆட்சி மொழியாகும் வரை ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும் இது ராஜாஜியின் கருத்து என்று மதிமுக பொதுச் செயளாலர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தவர், “23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவையில் உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறேன். தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர் நோக்கியிருக்கிறது. மேகதாது அணை கட்டுவதன் மூலம் காவிரி அடியோடு பாழாகிவிடும். ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் தமிழகம் மெதுவாக சஹாரா பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் இருக்கிறது” என்றார்.
அதன் பின்னர் அணிக்கழிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “ அணுக் கழிவுகள் கொட்டுவதன் மூலம் 100 அணு குண்டுகள் வெடிக்கும் அளவுக்கு ஆபத்து ஏற்படும். தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்” என குறிப்பிட்டார்.
நியூட்ரினோ திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிதவர், “ நியூட்ரினோ திட்டத்தால் தேனியில் இருக்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணை, கேரளத்தில் இருக்கக்கூடிய இடுக்கி அணை உடையும் அபாயம் இருக்கிறது. இவையெல்லாம் தமிழகத்தை எதிர்நோக்கி இருக்கக் கூடிய ஆபத்துக்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதனித் தொடர்ந்து நெக்ஸ்ட் குரித்த கேள்விக்கு பதிலளித்தவர், “மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்ற அபாய திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.
இந்தி பற்றி பேசியவர், “எல்லா துறைகளிலும் இன்று ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது . அனைத்து மத நம்பிக்கை இருப்பவர்கள் கொண்ட நாட்டில் மதசார்பை குலைக்கும் ஆபத்து நேர்ந்திருக்கிறது. Semi garrison - India tha dangerous decade புத்தகத்தில் குறிப்பிட்ட dangerous decade இது தான்” என குறிப்பிட்டார்.
மேலும் “தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும், 22 மொழிகளையும் ஆட்சி மொழியாகும் வரை ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும் இது ராஜாஜியின் கருத்து” என்று கூறினார்.
மேலும் படிக்க... நிஜ ராட்சசி மகாலட்சுமி சொல்வது என்ன?
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.