Home /News /tamil-nadu /

புகைப்பட, ஒளிப்பட தொழிலாளர்களுக்கு உதவுங்கள்...! வைகோ அரசுக்கு கோரிக்கை

புகைப்பட, ஒளிப்பட தொழிலாளர்களுக்கு உதவுங்கள்...! வைகோ அரசுக்கு கோரிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் ஆவணப்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு வழங்கும் நிழல்பட கலைஞர்கள், தங்கள் வாழ்வில் ஒளி இழந்து தவிப்பதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
    வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் புகைப்பட மற்றும் ஒளிப்படத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சிறப்புஉதவி தொகை வழங்குமாறு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்டபங்கள், கோவில்கள் மூடப்பட்டதால், கடந்த இரண்டு மாதங்களாக நிழல்பட கலைஞர்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    இவர்களுக்கு தனி நலவாரியம் இல்லாததால், அரசு அறிவித்த உதவித்தொகை கூட பெற முடியவில்லை என்றும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

    ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் ஆவணப்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு வழங்கும் நிழல்பட கலைஞர்கள், தங்கள் வாழ்வில் ஒளி இழந்து தவிப்பதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankar
    First published:

    Tags: Lockdown, Vaiko

    அடுத்த செய்தி