ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதிமுக - இந்து அமைப்புகள் இடையே மோதல்... கல்வீச்சு... பதற்றம்!

மதிமுக - இந்து அமைப்புகள் இடையே மோதல்... கல்வீச்சு... பதற்றம்!

கோப்புப்படம்

கோப்புப்படம்

நெல்லை காவல் கிணறுவில் பிரதமர் மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கருப்பு பலூனை வைகோ பறக்கவிட்டார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினருக்கும், இந்து அமைப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு எதிப்பு தெரிவித்து நெல்லை காவல் கிணறுவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வைகோ மற்றும் மதிமுக தொண்டர்கள் கன்னியாகுமரி நுழைவதற்கு எதிராக குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியில் பாஜக தொண்டர்கள் கூடியிருந்தனர்.

அப்போது, மதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஆரஞ்சு நிற பலூன்களுடன் புகுந்த இந்து அமைப்பினர் வைகோவுக்கு எதிராக முழக்கங்களை எழப்பினர். இதனால் மதிமுகவினருக்கும்-இந்து அமைப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் கற்கள் வீசிய இந்து அமைப்பினரை மதிமுகவினர் விரட்டிச் சென்றனர். இதற்கு பயந்து இந்து அமைப்பினர் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர், நெல்லை காவல் கிணறுவில் பிரதமர் மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கருப்பு பலூனை வைகோ பறக்கவிட்டார். அதன் பிறகு வைகோ உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Also see... மோடி பேச்சை கேட்டு குறட்டை விட்டு தூங்கிய பாஜகவினர்! 

Published by:Vaijayanthi S
First published:

Tags: Vaiko