கருப்பு கொடி காட்டியது ஏன்? வைகோ விளக்கம்

"வைகோவின் வெற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்" என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: February 11, 2019, 9:41 AM IST
கருப்பு கொடி காட்டியது ஏன்? வைகோ விளக்கம்
வைகோ
Web Desk | news18
Updated: February 11, 2019, 9:41 AM IST
தமிழகத்தை வஞ்சித்துள்ள பிரதமர் மோடிக்கு, மக்களின் கொந்தளிப்பை காட்டும் விதமாக கருப்புக்கொடி காட்டினோம் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் திருப்பூரில் நடைபெற்றது. பா.ஜ.க கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு சென்னை விமான நிலையம் வந்த பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகளோ, மக்களோ கருப்புக்கொடி காட்டவில்லை என்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாத வைகோ கருப்புக் கொடி காட்டினார் என்றும் கூறினார்.

மேலும், வைகோவிற்கு எதிராக கருப்புக் கொடி காட்டவேண்டும் என்று கூறிய பாஜக தொண்டர்களிடம் தான் வேண்டாம் என்று சொன்னதாகவும் தமிழிசை கூறினார். அதனைத் தொடர்ந்து பேசியவர்  வைகோவின் வெற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றும் கூறினார்.

இதையடுத்து, வைகோ சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் தமிழிசை சவுந்திரராஜனின் அறிவறுத்தலையும் மீறி பாரத் மாதா கீ ஜே என ஆவேசமாக முழக்கமிட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பாஜக தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ’தமிழகத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் மோடி என்றும் தமிழகத்தை வஞ்சித்தவர் என்றும்  கடுமையாக குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழக மக்களின் கொந்தளிப்பை காட்டும் விதமாக கருப்புக் கொடி காட்டினோம் என்று கூறிய வைகோ, தன்னை தமிழக மக்கள் பாதுகாப்பார்கள் என்றும் கோட்சே வாழ்க என்று சொல்லக் கூடிய கூட்டம் தமிழகத்தில் வாலாட்ட முடியாது என்றும் வைகோ கூறினார்.

Also See... 

வராத தண்ணீருக்கு வரியா?
First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...