ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீட் தேர்வு மையங்கள் திடீர் மாற்றம் - வைகோ கடும் கண்டனம்

நீட் தேர்வு மையங்கள் திடீர் மாற்றம் - வைகோ கடும் கண்டனம்

வைகோ

வைகோ

"மருத்துவப் படிப்புகளில் தமிழக மாணவர்களை தேர்வு எழுத முடியாமல் வெளியேற்றுவதற்கான சதியோ என்றுதான் ஐயப்பாடு எழுகிறது"

  • News18
  • 2 minute read
  • Last Updated :

நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், நெல்லை மற்றும் மதுரையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 6 தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளது. இதற்கு மதிமுக பொதுச்செயளாலர் வைகோ கடும் கண்கடனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிக்காண நுழைவுத்தேர்வு( நீட்) திணிக்கப்பட்டு, தமிழக மாணவர்களின் கல்வி உரிமையைத் தட்டிப்பறித்த மத்திய பாஜக அரசு, தொடர்ந்து தமிழக மாணவர்களை வஞ்சித்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வை நடத்தும்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்து அலைக்கழித்தது.

இதன் மூலம் பெரும்பான்மையான மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத மனதளவில் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 40,000 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் தமிழ்நாட்டில் 14 நகரங்களில் தேர்வு மையங்களை இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ, அறிவித்துள்ளது.

தேர்வுக்கான நுழைவுச் சீட்டு கடந்த மாதம் 15-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களுடைய விவரங்களைப் பதிவேற்றி தேர்வு எழுதுவதற்கான நுழைவுச் சீட்டை பதிவு இறக்கம் செய்தனர். ஆனால் பெரும்பாலான நுழைவு சீட்டுகளில் தேர்வு தேதி மாறியும், தேர்வு மையங்கள் தவறாகவும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இது பற்றிய புகார்கள் வந்ததும் தேர்வு நடத்தும் முகமை தவறுகளை சரி செய்ததாகக் கூறியது. எனவே மீண்டும் நுழைவுச் சீட்டுக்களை மாணவர்கள் பதிவு இறக்கம் செய்து நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் மதுரையில் உள்ள 6 தேர்வு மையங்கள் உட்பட, நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் திடீரென்று முன்னறிவிப்பு இல்லாமல் மாற்றப்பட்டுள்ளன.

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்வு மையங்களை திடீரென்று மாற்றி உள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்ததுடன், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மருத்துவப் படிப்புகளில் தமிழக மாணவர்களை தேர்வு எழுத முடியாமல் வெளியேற்றுவதற்கான சதியோ என்றுதான் ஐயப்பாடு எழுகிறது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் இதுபோன்ற குளறுபடிகளை தேர்வை நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டமிட்டு செய்து வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.

நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு இது பற்றி எல்லாம் கவலைப்படாமல் மோடி அரசுக்கு கைகட்டி சேவகம் செய்து வருவதோடு பதவி, ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது என்பதை தமிழக மக்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள்.

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப்போக்குக்கு எதிராக தமிழ்நாட்டு இளைஞர்கள் கொந்தளித்துப் போய் இருக்கின்றனர் என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகளும், சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகளும் நிச்சயமாக பறைசாற்றும். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

Also See... ஓடிசாவை உருகுலைத்த ஃபோனி!

Also see... செங்கல்பட்டு ₹11 கோடி தங்க நகை கொள்ளையில் குற்ற வாளிகள் சிக்கியது எப்படி?

Also see... 


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Neet, Neet Exam, Vaiko condemned