ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெல்லையில் மீண்டும் வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு - வைகோ கண்டனம்

நெல்லையில் மீண்டும் வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு - வைகோ கண்டனம்

வைகோ

வைகோ

பட்டாசு ஆலை விபத்துக்கு காரணமான துறை அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

நெல்லை மாவட்டம் வரகனூரில் மீண்டும் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து இன்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் வட்டம் வரகனூர் கிராமத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில், கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், ஆலை வெடித்துச் சிதறியது. இதில் 6 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். அந்த ஆலைக்குச் சீல் வைக்கப்பட்டது..

இந்த நிலையில், மூடிச் சீல் வைக்கப்பட்டுள்ள அந்த ஆலையின் ஒரு பகுதி கட்டடத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள், இன்று காலை வெடித்துச் சிதறியதில், ஆலைக்கு வெளியே தனியார் நிலத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாங்குடி கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களான கோபால், கனகராஜ், அர்ஜூன், குருசாமி, காமராசர் ஆகிய 5 பேர் கோரமான முறையில் இறந்து விட்டனர்.

இதில் அர்ஜூன் 17 வயது நிரம்பிய மாணவர் என்பதும், கோடை விடுமுறையில் குடும்பத்திற்கு வருவாய் ஈட்டி உதவிட கூலி வேலைக்கு வந்தவர் என்பதும் பெருந்துயரைத் தருகின்றது. பட்டாசு ஆலையை மூடி சீல் வைப்பதற்கு முன்பு, ஆபத்தான பட்டாசுகளோ, இரசாயனக் கலவைகளோ ஆலை வளாகத்தில் இல்லை என்பதை, அரசு நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையும் உறுதிப்படுத்தாதது ஏன்? குறைந்தபட்சம் ஆலைக்குள் ஆபத்தான பொருட்கள் உள்ளது என்பதைக்கூட அறிவிப்பு மூலம் வெளிப்படுத்தாதது ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன.

அப்பாவித் தொழிலாளர்கள் 5 பேரின் உயிர் இழப்புக்குக் காரணமான தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் பொறுப்பு அற்ற போக்கிற்குக் வைகோ கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதற்குக் காரணமான துறை அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆலையை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து எஞ்சி இருக்கின்ற ஆபத்தான பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உயிர் இழந்த தொழிலாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், உற்றார் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

Also see... சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் ரஜினி கூட்டணி சேருவார்: மைச்சர் ராஜேந்திர பாலாஜி

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Ban firecrackers, Thirunelveli, Vaiko condemned