ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

23 ஆண்டுகளுக்குப் பின் மாநிலங்களவை எம்.பி ஆகும் வைகோ!

23 ஆண்டுகளுக்குப் பின் மாநிலங்களவை எம்.பி ஆகும் வைகோ!

வைகோ

வைகோ

1978-ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவைக்குச் சென்ற வைகோ 1996 வரை எம்.பி.யாக இருந்தார். இதற்கிடையே, 1994-ம் ஆண்டில் திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவை அவர் தொடங்கினார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  திமுக உடன் இன்று நடந்த தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மதிமுகவுக்கு 1 மக்களவை தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  மக்களவை தேர்தல் தேதி அடுத்தவாரம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணி விவகாரங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வந்தது. அதிமுக கூட்டணியில் பாஜக - பாமக இடம் பெற்றுள்ளது.

  திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வருவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தொகுதி பங்கீட்டால் இழுபறி நீடித்து வருகிறது.

  இந்நிலையில், தொகுதி பங்கீட்டு வேலைகளை திமுக இன்று முடித்துள்ளது. திமுக 20, காங்கிரஸ் 10, சிபிஐ 02, சிபிஎம் 02, விசிக 02, மதிமுக 01, முஸ்லிம் லீக் 01, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 01, இந்திய ஜனநாயக கட்சி 01 என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது. விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் சின்னம் தொடர்பான முடிவுகளை இன்னும் எடுக்கவில்லை.

  மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கனிமொழி உள்ளிட்ட 6 தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. எம்.எல்.ஏ.க்கள் கணக்கின் அடிப்படையில், திமுக 3 எம்.பி. சீட்டுகளில் வெற்றிபெற முடியும்.

  தற்போது, இதில் ஒரு சீட் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. 1978-ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவைக்குச் சென்ற வைகோ 1996 வரை எம்.பி.யாக இருந்தார். இதற்கிடையே, 1994-ம் ஆண்டில் திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவை அவர் தொடங்கினார்.

  1998-2004-ம் ஆண்டில் அவர் சிவகாசி தொகுதி மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பின் வைகோ மாநிலங்களவைக்குச் செல்ல வாய்ப்பு அமைந்துள்ளது.

  Also See...

  Published by:Sankar
  First published:

  Tags: Lok Sabha Election 2019, Vaiko