ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மத்திய அரசு வேலைகளில் தமிழர்கள் புறக்கணிப்பு - வைகோ!

மத்திய அரசு வேலைகளில் தமிழர்கள் புறக்கணிப்பு - வைகோ!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

90 விழுக்காடு ரயில்வே பணியிடங்களில் வடமாநிலத்தவரே நியமிக்கப்படுவதாகவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதில், தமிழக இளைஞர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில், எலக்ட்ரிஷியன், பிட்டர், மெக்கானிக் உள்ளிட்ட வேலைகளுக்கு 1765 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

  ஆனால், இதில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்து 600 பேர் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி., பெல் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 விழுக்காடு வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே பணியில் அமர்த்தியுள்ளதாக புகார் கூறியுள்ளார்.

  2014 நவம்பரில், ரயில்வே குரூப்-டி பணியாளர் தேர்வுக்கான சான்றிதழ் நகல்களில், அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெறும் விதி நீக்கப்படுவதாக தமிழ் நாளிதழில் விளம்பரம் வெளியானதை குறிப்பிட்டுள்ள அவர், இருந்த போதும், ஆங்கில நாளிதழில் Attestation அவசியம் என வெளியிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

  ஆனால், தமிழ் நாளிதழ் விளம்பரத்தைப் பார்த்து Attestation இல்லாமல் ரயில்வே பணிக்கு விண்ணப்பித்த இரண்டரை லட்சம் தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் வைகோ சாடியுள்ளார்.

  மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பதால், இதுபோன்ற அவலத்தை தமிழக அரசு கண்டுகொள்வதில்லை என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

  எனவே, ரயில்வே உட்பட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்க, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Vaiko